×

அருண் விஜய் நடிக்கும் புதிய படம் -இயக்குனர் யார் தெரியுமா ?

 

கிரிஷ் திருக்குமரன் இயக்கத்தில் 36-வது படமான 'ரெட்ட தல' படம் சமீபத்தில் வெளியானது. அறிவழகன் இயக்கத்தில் அருண் விஜய் நாயகனாக நடித்துள்ள படம் ‘பார்டர்’.இப்படம் விநியோகத்தில் ஏற்பட்டுள்ள சிக்கலினால் இன்னும் வெளியாகாமல் உள்ளது.அருண் விஜய், “அடுத்து நாயகனாக முத்தையா இயக்கவுள்ள படத்தில் நடிக்கவுள்ளேன். இதன் படப்பிடிப்பு மார்ச் மாதத்தில் இருந்து தொடங்கவுள்ளது.இது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும். ‘ரெட்ட தல’ படத்தினைத் தொடர்ந்து ‘பார்டர்’ படமும் விரைவில் வெளியாகும். அதுவும் விரைவில் வெளியாகவுள்ளது” என்று தெரிவித்துள்ளார். முத்தையா இயக்கத்தில் அருள்நிதி நாயகனாக நடித்த ‘‘ராம்போ’ படம் நேரடியாக சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் வெளியிடப்பட்டது. தனது மகனை நாயகனாக வைத்து ’சுள்ளான் சேது’ என்ற படத்தினை இயக்கி முடித்துள்ளார். இப்படம் விரைவில் வெளியாகவுள்ளது.