இயக்குநர் பாலா குறித்து அருண் விஜய் நெகிழ்ச்சி பதிவு.. !
பாலா இயக்கத்தில் அருண் விஜய் மற்றும் ரோஷிணி பிரகாஷ் நடிப்பில் உருவாகியுள்ள படம் வணங்கான். இப்படத்தில் சமுத்திரக்கனி, மிஷ்கின் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சுரேஷ் காமாட்சி மற்றும் பாலா இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். இப்படத்தின் டீசர் மற்றும் ட்ரைலர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதனிடையே இப்படம் கடந்த ஜூலையில் வெளியாகும் என அறிவித்திருந்தது. ஆனால் அம்மாதத்தில் இப்படம் வெளியாகவில்லை. விரைவில் ரிலீஸ் அப்டேட் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் இப்படத்தை வெள்ளித்திரையில் பார்த்து உணர்ச்சிகளை வெளிப்படுத்த வார்த்தைகள் இல்லை என அருண் விஜய் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “மன நெகிழ்வுடனும் கனத்த இதயத்துடனும், என் இயக்குனர் பாலாவுக்கு, நான் திரையுலகில் கால் பதித்த காலத்தில் இருந்து, உங்கள் படைப்புகளின் ரசிகனாகவும், உங்களைக் கண்டு வியந்து, நேசித்து, ஒரு நடிகனாக ‘எனக்கும் இப்படி ஒரு வாய்ப்பு கிடைக்காதா’ என ஏங்கியவனுக்கு தங்களின் இயக்கத்தில் பணியாற்ற 'வணங்கான்' படத்தின் மூலம் வாய்ப்பளித்தமைக்கு மனமார்ந்த நன்றிகள்.