×

அடேங்கப்பா… 150 கிலோ வெயிட் தூக்கி வெயிட்டு காட்டும் ஆர்யா!

பா ரஞ்சித் இயக்கும் சல்பேட்டா படத்தில் பாக்ஸராக நடிக்கும் ஆர்யா வெறித்தமனாக ஒர்கவுட் செய்யும் வீடியோவை வெளியிட்டுள்ளார். பா.ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா, கலையரசன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் சல்பேட்டா படம் உருவாகி வருகிறது. இப்படம் பாக்சிங் கதைக்களத்தைச் சுற்றி உருவாகி வருகிறது. இப்படத்தில் துஷாரா விஜயன் கதாநாயகியாக நடிக்கிறார். தமிழக அரசு படப்பிடிப்பிற்கு அனுமதி அளித்ததை அடுத்து தற்போது சல்பேட்டா படக்குழுவும் முழுவீச்சில் தயாரிக்கவிட்டதாகத் தெரிகிறது. ஏற்கனவே கலையரசன் வெறித்தனமாக உடற்பயிற்சி செய்யும் வீடியோவை ஆர்யா வெளியிட்டிருந்தார்.
 

பா ரஞ்சித் இயக்கும் சல்பேட்டா படத்தில் பாக்ஸராக நடிக்கும் ஆர்யா வெறித்தமனாக ஒர்கவுட் செய்யும் வீடியோவை வெளியிட்டுள்ளார்.

பா.ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா, கலையரசன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் சல்பேட்டா படம் உருவாகி வருகிறது. இப்படம் பாக்சிங் கதைக்களத்தைச் சுற்றி உருவாகி வருகிறது. இப்படத்தில் துஷாரா விஜயன் கதாநாயகியாக நடிக்கிறார். தமிழக அரசு படப்பிடிப்பிற்கு அனுமதி அளித்ததை அடுத்து தற்போது சல்பேட்டா படக்குழுவும் முழுவீச்சில் தயாரிக்கவிட்டதாகத் தெரிகிறது.

ஏற்கனவே கலையரசன் வெறித்தனமாக உடற்பயிற்சி செய்யும் வீடியோவை ஆர்யா வெளியிட்டிருந்தார். அந்த வீடியோ இணையத்தில் வைரலானது. அத்துடன் இறுதி கட்ட படப்பிடிப்பில் கலந்துகொள்ள இருப்பதாகவும் தெரிவித்திருந்தார்.

தற்போது ஆர்யா வெளியிட்டுள்ள வீடியோவில், 150 கிலோ எடை கொண்ட பளுவை தூக்கி வெறித்தனமாக ஒர்கவுட் செய்யும் வீடியோவை வெளியிட்டுள்ளார்.

“கலையரசன் உடன் இறுதி மோதலுக்கு தயாராகி வருகிறேன்.
150 கிலோ புல் ஸ்குவாட்… எப்போதும் உங்கள் உடற்பயிற்சியாளர் மீது நம்பிக்கை வையுங்கள்…” என்று தெரிவித்துள்ளார்.