"இது ஆக்ஷன் படம் மட்டுமல்ல..."ஆர்யா புகழும் படம் எது தெரியுமா ?
Jun 30, 2026, 08:00 IST
ஆர்யா நடிப்பில் தமிழ் மற்றும் மலையாளத்தில் உருவாகியுள்ளது ‘அனந்தன் காடு’ என்ற படம், முரளி கோபி கதை, திரைக்கதை, வசனம் எழுதியுள்ளார். ஜியேன் கிருஷ்ணகுமார் இயக்க, மினி ஸ்டுடியோஸ் சார்பில் எஸ்.வினோத் குமார் தயாரித்துள்ளார். எஸ்.யுவா ஒளிப்பதிவு செய்ய, பி.அஜனீஷ் லோக்நாத் இசை அமைத்துள்ளார். படம் குறித்து ஜியேன் கிருஷ்ணகுமார் கூறுகையில், ‘இது ஆக்ஷன் படம் மட்டுமல்ல.
உணர்வுகள், மனிதர்களின் வாழ்க்கை மற்றும் பல்வேறு அடுக்குகள் கொண்ட கதைக்களத்தை உள்ளடக்கிய படம். வரலாற்று பின்னணிகள் கொண்டிருந்தாலும், படம் எந்த சமூகத்தையோ அல்லது மக்களையோ புண்படுத்தும் நோக்கத்தில் உருவாக்கப்படவில்லை’ என்றார். ஆர்யா பேசும்போது, ‘ரெஜினா, இந்திரன்ஸ், சுனில், விஜயராகவன், தேவமோகன், நிகிலா விமல், போஸ் வெங்கட், அஞ்சலி நாயர் ஆகியோர் சிறப்பாக நடித்துள்ளனர்.