ஆர்யா - சந்தானம் நடித்த  ’பாஸ் (எ) பாஸ்கரன்’ ரீ-ரிலீஸ் 

 
arya

ஆர்யா நடிப்பில் பிரபலமான ‘பாஸ் (எ) பாஸ்கரன்’ திரைப்படம் மீண்டும் ரீ-ரிலீஸ் ஆகவுள்ளது.

தற்போது பழைய படங்கள் மீண்டும் வெளியிடப்பட்டு வருவது ட்ரெண்ட் ஆகி வருகிறது. இப்பட்டியலில் இணைந்துள்ளது ‘பாஸ் (எ) பாஸ்கரன்’.  ராஜேஷ் இயக்கத்தில் ஆர்யா, நயன்தாரா, சந்தானம் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவான படம் ‘பாஸ் (எ) பாஸ்கரன்’. வாசன் விசுவல் மற்றும் தி ஷோ பீப்புள் ஆகிய நிறுவனங்கள் இணைந்து இப்படத்தினை தயாரித்தன.

arya

இதனை ரெட் ஜெயன்ட் நிறுவனம் வெளியிட்டது. 2010-ம் ஆண்டு வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்ற படம் இது. இதன் காமெடி காட்சிகள் இப்போதும் கொண்டாடப்பட்டு வருகிறது.  இந்நிலையில், மார்ச் 21-ம் தேதி ‘பாஸ் (எ) பாஸ்கரன்’ வெளியாகும் என்று தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது