தொடங்கியது ‘MrX’ ஷூட்டிங்... ஆர்யா - கெளதம் கார்த்திக் படத்தின் புதிய அப்டேட் !
ஆர்யா மற்றும் கெளதம் கார்த்திக் இணைந்து நடிக்கும் ‘Mr.X’ படத்தின் ஷட்டிங் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.
முதல்முறையாக ஆர்யா மற்றும் கெளதம் கார்த்திக் இணைந்து நடிக்கும் திரைப்படம் ‘Mr.X’. இரு கதாநாயகர்கள் நடிக்கும் இப்படத்தை 'எப்.ஐ.ஆர்' படத்தை இயக்கிய மனு ஆனந்த் இயக்கி வருகிறார். இணையத்தள குற்றத்தை மையமாக வைத்து ஆக்ஷன் த்ரில்லரில் உருவாகும் இந்த படத்தை பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.
இந்த படத்தில் ஆர்யா ஹீரோவாகவும், கெளதம் கார்த்திக் வில்லனாகவும் நடித்து வருகின்றனர். இவர்களுக்கு ஜோடியாக மலையாள நடிகை மஞ்சு வாரியர் மற்றும் அனகா ஆகிய இரு கதாநாயகிகள் நடிக்கின்றனர். இவர்களுடன் பிரபல நடிகர் சரத்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். தன்வீர் வீர் ஒளிப்பதிவாளராக பணியாற்றும் இந்த படத்திற்கு திபு நிபுணன் தாமஸ் இசையமைக்கிறார்.
தமிழ், தெலுங்கு, இந்தி என 5 மொழிகளில் பான் இந்தியா திரைப்படமாக பெரிய பட்ஜெட்டில் இந்த படம் உருவாகிறது. இந்நிலையில் இப்படத்தின் ஷூட்டிங் நேற்று சென்னையில் தொடங்கியது. வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகும் இந்த படம் மல்டி ஸ்டார் படமாக உருவாகிறது. இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.