ஆர்யா மனைவி சாயிஷா நடன வீடியோவுக்கு குவியும் கமெண்ட்ஸ்..!
Sep 28, 2024, 13:30 IST
நடிகை சாயிஷா, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் செம்மையாக நடனமாடும் வீடியோவை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவுக்கு கேமராமேன் பாராட்டப்பட வேண்டும் என்பது போன்ற கமெண்ட்கள் அதிகமாக பதிவாகி வருகிறது. தமிழ் திரையுலகில் 'வனமகன்' என்ற படத்தில் அறிமுகமான சாயிஷா, அதன் பிறகு 'கடைக்குட்டி சிங்கம்', 'ஜூங்கா', 'கஜினிகாந்த்' உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்தார். 2019 ஆம் ஆண்டு, நடிகர் ஆர்யாவை திருமணம் செய்து கொண்ட நிலையில், இந்த தம்பதிக்கு 2021 ஆம் ஆண்டு பெண் குழந்தை பிறந்தது. திருமணத்திற்கு பிறகு, சாயிஷா கிட்டத்தட்ட நடிப்பதை நிறுத்திக்கொண்டார். ஆனால், சிம்பு நடித்த 'பத்து தல' திரைப்படத்தில் ஒரே ஒரு பாடலுக்கு மட்டும் நடனம் ஆடினார். தற்போது, மீண்டும் அவர் திரைப்படங்களில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.