சரத்குமாருடன் இணைந்து நடிக்கும் அசோக் செல்வன்... த்ரில்லர் படத்தின் டைட்டில் அறிவிப்பு !
அசோக் செல்வன் மற்றும் சரத்குமார் இணைந்து நடிக்கும் புதிய படத்தின் தலைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் சினிமாவில் இளம் ஹீரோவாக இருப்பவர் நடிகர் அசோக் செல்வன். ‘சூது கவ்வும்’ படத்தின் மூலம் பிரபலமான அவர், ‘நெகிடி’, ‘கூட்டத்தில் ஒருவன்’, ‘ஹாஸ்டல்’ உள்ளிட்ட பல வெற்றிப் படங்களில் நடித்தள்ளார். இப்படி பிசியான ஹீரோவாக வலம் வரும் அசோக் செல்வன், அடுத்து நடிகர் சரத்குமாருடன் இணைந்து புதிய படம் ஒன்றில் நடிக்கவுள்ளார்.
வெற்றிவேல், கிடாரி உள்ளிட்ட படங்களில் நடித்த நிகிலா விமல் இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்கவுள்ளார். த்ரில்லர் கதைக்களத்தில் உருவாகும் இந்த படத்தை விக்னேஷ் ராஜா இயக்கவுள்ளார். வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இப்படத்தின் டைட்டில் லுக் மோஷன் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. அப்பலாஸ் என்டர்டெயின்மென்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகும் இந்த படத்திற்கு ‘போர் தொழில்’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இதையொட்டி வெளியிடப்பட்டுள்ள மோஷன் போஸ்டர் வரவேற்பை பெற்றுள்ளது.