×

மிரட்டலாக நடிக்கும் அதர்வா... புதிய படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் வெளியீடு !

 

அதர்வா நடிப்பில் உருவாகும் புதிய படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. 

‘டிரிக்கர்’ படத்திற்கு பிறகு நடிகர் அதர்வா நடிப்பில் புதிய படம் உருவாகிறது. இந்த படத்தை ‘பட்டத்து யானை’ படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றிய ராகவேந்திரா மாதவா இயக்கி வருகிறார். அதர்வாவுக்கு ஜோடியாக லாவண்யா திரிபாதி நடித்து வருகிறார். இவர்களுடன் நடிகர் அஸ்வின் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். 

சக்தி சரவணன் ஒளிப்பதிவாளராக பணியாற்றி வரும் இந்த படத்திற்கு ஜஸ்டின் பிரபாகர் இசையமைக்கவுள்ளார். ஒரு சாதாரண மனிதனாக வாழும் ஹீரோ, ஒரு புள்ளியில் போலீசாக வேண்டும் என்று ஆசைப்படுகிறார். அதற்காக அவர் செய்யும் ஹீரோயிசமே இப்படத்தின் கதை.

தற்போது இந்த படத்தின் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி இந்த படத்திற்கு ‘தனல்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இதையொட்டி வெளியிடப்பட்டுள்ள மிரட்டலான போஸ்டர் ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ளது.