×

‘குட்டி இளவரசர் வந்தாச்சு’... மகிழ்ச்சியில் அட்லி - பிரியா தம்பதி !

 

அட்லி - பிரியா தம்பதி, தங்களுக்கு மகன் பிறந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். 

பிரபல இயக்குனராக இருக்கும் அட்லி, ஆர்யா - நயன்தாரா நடிப்பில் வெளியான ‘ராஜா ராணி’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். அதன்பிறகு விஜய்யுடன் இணைந்து தெறி, மெர்சல், பிகில் என அடுத்தடுத்து மூன்று படங்களை இயக்கினார். தற்போது பாலிவுட்டில் ஷாருக்கானை வைத்து ‘ஜவான்’ படத்தை இயக்கி வருகிறார்.

இதற்கிடையே கடந்த 2014-ஆம் ஆண்டு பிரியா என்பவரை காதலித்து அட்லி திருமணம் செய்துக் கொண்டார். இதையடுத்து 8 வருடங்களுக்கு பிறகு தனது மனைவி கர்ப்பமாக இருப்பதாக கடந்த மாதம் அட்லி அறிவித்தார். இதைத்தொடர்ந்து வளைக்காப்பு நிகழ்ச்சியை நடத்தினார். இதில் நடிகர் விஜய் உள்ளிட்ட பிரபலங்கள் கலந்துக்கொண்டு வாழ்த்தினர்.   

இந்நிலையில் அட்லி - பிரியா தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து இயக்குனர் அட்லி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், தற்போது இந்த உலகில் இல்லாத உணர்வு உள்ளது. எங்களுக்கு ஆண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. இது புதியதொரு தொடக்கமாக உள்ளது என்று கூறியுள்ளார்.