×

மகன் மீருடன் அட்லீ... வைரலாகும் புகைப்படம்...

 

பிறந்தநாள் அன்று மகன் மீருடன் இயக்குநர் அட்லீ  எடுத்துக் கொண்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தமிழில் ராஜா ராணி, மெர்சல், தெறி உள்ளிட்ட படங்களை இயக்கியிருக்கும் அட்லீ தற்போது பாலிவுட் திரையுலகில் கால் பதித்துள்ளார். ஷாருக்கான் நடிப்பில் ஜவான் திரைப்படத்தை அவர் இயக்கியுள்ளார். இப்படத்தில் நயன்தாரா, விஜய் சேதுபதி, பிரியாமணி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ளார். ஜவான் திரைப்படம் 900 கோடிக்கு மேல் உலகம் முழுவதும் வசூல் செய்து, ஆயிரம் கோடி ரூபாயை நெருங்கி வருகிறது. இந்நிலையில், அட்லீ தனது 37 வது பிறந்தாளை குடும்பத்தினருடன் விமரிசையாக கொண்டாடினர். பிறந்தநாள் அன்று, உயிரியல் பூங்கா ஒன்றில் தன் மகன் மீருடன் அவர் எடுத்துக் கொண்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வ ருகிறது.