☰
×

விஜய் சேதுபதி, லிஜோமோல் ஜோஸ் நடித்த, ‘பத்தா’. -படம் பற்றி அட்லீ என்ன சொன்னார் தெரியுமா ?

 

பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, லிஜோமோல் ஜோஸ் நடித்துள்ள படம், ‘பத்தா’. ஸ்டார் ஸ்டுடியோ 18 மற்றும் இயக்குனர் அட்லி வழங்கும் இப்படத்தை ஏ ஃபார் ஆப்பிள் ஸ்டுடியோஸ், சினி 1 ஸ்டுடியோஸ் புரொடக்‌ஷன் இணைந்து தயாரித்துள்ளன. சாய் அப்யங்கர் இசை அமைத்துள்ளார்.

வரும் அக்டோபர் 1ம் தேதி திரைக்கு வரும் இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் அட்லி, பிரியா அட்லி, பாடலாசிரியர்கள் விவேக், கார்த்திக் நேத்தா, தமிழ், கானா ஜானி, கலை இயக்குனர் டி.முத்துராஜ், எடிட்டர் ஆர்.கலைவாணன், ஒளிப்பதிவாளர் எஸ்.கே.செல்வகுமார், தயாரிப்பாளர்கள் அஜித் அந்தாரே, முராத் கெதானி, இயக்குனர்கள் பாக்கியராஜ் கண்ணன், சிபி சக்கரவர்த்தி மற்றும் படக்குழுவினர் கலந்துகொண்டனர். அப்போது விஜய் சேதுபதி பேசியதாவது:

கதையை கேட்ட அட்லி, ‘இந்த படம் உலக விழாக்களிலும், திரையரங்குகளிலும் மிகப்பெரிய அளவில் பேசப்படும்’ என்று சொன்ன வார்த்தை எனக்கு மிகப்பெரிய நம்பிக்கையை கொடுத்தது. ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’, ‘சீதக்காதி’ ஆகிய படங்களுக்கு பிறகு பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் நடித்திருக்கிறேன். லிஜோமோல் நடிப்பு எனக்கு ஆச்சரியமாக இருந்தது. இந்த படத்தை ஆஸ்கர் விருதுக்கு அனுப்ப வேண்டும் என்று சொன்னார்கள். காரணம், படம் அவ்வளவு சிறப்பாக இருக்கிறது