அல்லு அர்ஜுனின் ராக்கா படம் பற்றி இயக்குனர் அட்லீ என்ன சொல்கிறார் தெரியுமா ?
அல்லு அர்ஜுன் தனது பிறந்த நாளை கொண்டாடினார். இதையொட்டி படத்தின் தலைப்புடன் கூடிய பர்ஸ்ட் லுக் வெளியானது. அதில், ‘ராக்கா’ என்ற தலைப்புடன் பாதி மிருக தோற்றத்தில் இருக்கும் அல்லு அர்ஜுனின் போஸ்டர் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பர்ஸ்ட் லுக் போஸ்டரும் படத்தின் தலைப்பும் மிரட்டலாக இருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இந்த போஸ்டர் இணையதளங்களில் வைரலாகி வருகிறது.
இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் வெளியாக உள்ளது. இந்தப் படத்தில் அல்லு அர்ஜூன் முற்றிலும் புதுமையான அவதாரத்தில் தோன்றவுள்ளார். இதுவரை அவர் நடித்த கதாபாத்திரங்களிலிருந்து முற்றிலும் மாறுபட்ட, சக்திவாய்ந்த மற்றும் மாற்றத்தைக் காட்டும் ஒரு வேடமாக இது இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இயக்குநர் அட்லி தனது தனித்துவமான கதை சொல்லும் முறையால் பிரபலமானவர். “ராக்கா” மூலம் அவர் மீண்டும் ஒரு மாபெரும் சினிமா உலகத்தை உருவாக்குகிறார்.
ஃபாண்டஸி, ஆக்ஷன் மற்றும் உணர்ச்சிகள் ஆகியவற்றை இணைத்து, இந்திய அடையாளத்துடன் உலக அளவிலான ரசிகர்களை கவரும் வகையில் இந்த படம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இயக்குநர் அட்லீ கூறியதாவது: “ராக்கா” சாதாரணமான ஒரு படம் இல்லை. இது நான் பல வருடங்களாக சுமந்து வந்த ஒரு கனவு. 18 ஆண்டுகளாக நான் யோசித்து வைத்திருந்த ஒரு கனவு இது. இந்தக்கதை என்னை சோதித்தது, வடிவமைத்தது, என் வாழ்க்கை முழுவதும் என்னுடன் இருந்தது. இது வெறும் ஆரம்பம் தான் என்றார்.