☰
×

லப்பர் பந்துக்கு பிறகு ‘அட்டகத்தி’ தினேஷ் நடித்து வரும் படங்களின் பட்டியல் இதோ 

 

‘அட்டகத்தி’ என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான தினேஷ், அதற்கு பிறகு ‘அட்டகத்தி’ தினேஷ் என்றே அறியப்படுகிறார். தொடர்ந்து ‘இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு’, ‘குக்கூ’, ‘விசாரணை’ உள்பட பல படங்களில் நடித்து கவனம் பெற்றார். தற்போது பா.ரஞ்சித் இயக்கத்தில் ‘வேட்டுவம்’ மற்றும் 26வது படமாக மதி ஆனந்த் இயக்கத்தில் ‘பந்தா கேங்ஸ்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். சில நாட்களுக்கு முன்பு தினேஷ் அளித்த பேட்டியில், தான் ஒரு பெண்ணை காதலித்து வருவதாகவும், விரைவில் திருமணம் செய்யப்போவதாகவும் சூசகமாக தெரிவித்துள்ளார்.