×

டப்பிங்கில் பிசியாக இருக்கும் ‘அட்டக்கத்தி’ தினேஷ்... இறுதிக்கட்டத்தில் ‘தண்டகாரண்யம்‘ !

 

‘அட்டக்கத்தி’ தினேஷ் ‘தண்டகாரண்யம்’ படத்தின் முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது. 

இளம் நடிகர்கள் ‘அட்டக்கத்தி’ தினேஷ் மற்றும் கலையரசன் ஆகிய இருவரும் முதல்முறையாக இணைந்து நடிக்கும் திரைப்படம் ‘தண்டகாரண்யம்’.  இந்த படத்தை ‘இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு' படத்தை இயக்கிய அதியன் ஆதிரை இயக்கி வருகிறார்.  பா ரஞ்சித்தின் நீலம் பிரொக்ஷன்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்து வருகிறது.

இந்த படத்தின் கதாநாயகிகளாக ரித்விகா, வின்ஷூசாம் ஆகிய இருவரும் நடிக்கின்றனர். இவர்களுடன் ஷபீர், பால சரவணன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். பிரதீப் காளிராஜா ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகர் இசையமைத்து வருகிறார்.

சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவுபெற்ற நிலையில் தற்போது தயாரிப்பு பணிகள் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இப்படத்தின் டப்பிங் பணிகள் இன்று பூஜையுடன் தொடங்கியுள்ளது. அதில் முதல்கட்டமாக ‘அட்டக்கத்தி’ தினேஷ் தனது டப்பிங்கை தொடங்கியுள்ளார். இது குறித்த புகைப்படங்களை படக்குழு வெளியிட்டுள்ளது.