×

கவனம் ஈர்க்கும் ஜி.வி. பிரகாஷின்  'கிங்ஸ்டன்' பட டிரெய்லர்...  யூடியூபில் ட்ரெண்டிங் no.1..

 

ஜி.வி. பிரகாஷ் நடித்த 'கிங்ஸ்டன்' பட டிரெய்லர் யூடியூபில் ட்ரெண்டிங் no.1ல் உள்ளது. 
ஜி.வி. பிரகாஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் கிங்ஸ்டன். ஸீ ஃபேண்டஸி ஜானர் கதைக்களத்தில் உருவாகியுள்ள இந்த படத்தை கமல் பிரகாஷ் இயக்கி இருக்கிறார். இதனை ஜிவி பிரகாஷ் தனது பேரலல் யுனிவர்ஸ் பிக்சர்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரித்து இந்த படத்திற்கு இசையும் அமைத்துள்ளார். இப்படத்தில் ஜிவி பிரகாஷ் உடன் இணைந்து திவ்யபாரதி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

<a href=https://youtube.com/embed/LwbQ5erKCp0?autoplay=1&mute=1><img src=https://img.youtube.com/vi/LwbQ5erKCp0/hqdefault.jpg alt=""><span><div class="youtube_play"></div></span></a>" style="border: 0px; overflow: hidden"" style="border: 0px; overflow: hidden;" width="640">

மேலும் ராஜேஷ் பாலச்சந்திரன், சேத்தன், அழகம்பெருமாள் மற்றும் பலர் நடித்திருக்கின்றனர். ஏற்கனவே இந்த படத்தின் படப்பிடிப்புகள் முழுவதும் நிறைவடைந்த நிலையில், மார்ச் மாதம் 7ஆம் தேதி திரைக்கு வர முழு வீச்சில் தயாராகி வருகிறது.இதற்கிடையில் இந்த படத்தில் இருந்து பர்ஸ்ட் லுக் போஸ்டர், டீசர், முதல் பாடல் என அடுத்தடுத்து வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.