×

தெலுங்கில் ரீமேக் ஆகிறதா பகத் பாசிலின் ஆவேஷம்...? 

 


ரோமஞ்சம் படத்தை இயக்கிய ஜித்து மாதவன் இயக்கத்தில் பகத் பாசில் நடித்த படம் ஆவேஷம். ஏப்ரல் மாதம் 11 ஆம் தேதி வெளியாகியது . படம் மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இதில் ஃபஹத் ஃபாசிலுடன் சஜின் கோபு, சிஜு சன்னி, ஆஷிஷ் வித்யார்த்தி, மன்சூர் அலிக்கான் போன்ற முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர். மஞ்சும்மல் பாய்ஸ் படத்திற்கு இசையமைத்த சுஷின் ஷ்யாம் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். படத்தின் பாடல்கள் அனைத்தும் மிகப் பெரியளவில் ஹிட்டாகியது குறிப்பாக டேப்சி குரலில் இலுமினாட்டி என்ற பாடல் இன்ஸ்டாகிராமில் வைரலாகி வந்தது. படத்தில் பகத் பாசில் முற்றிலும் மாறுபட்ட கேங்க்ஸ்டர் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். திரைப்படம் வெளியாகி சில மாதங்களுக்கு சமூக வலைத்தளங்களில் மிகப்பெரியளவில் வைரலாகி வந்தது. பகத் ஃபாசிலின் கதாப்பாத்திரமான ரங்கன் சேட்டா குழந்தைகள் முதல் பெரியவர் வரை கவரப்பட்டது.

தற்பொழுது இந்த படத்தை தெலுங்கு மொழியில் ரீமேக் செய்யப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது. தெலுங்கு மொழியில் சூப்பர் ஸ்டாரான பாலய்யா , ரங்கன் கதாப்பாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் பரவி வருகின்றது.இது எந்தளவுக்கு உண்மை என்று தெரியவில்லை. இது குறித்து அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியைடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.