×

புதிய சிக்கலில் அயலான் திரைப்படம்

 

டான், பிரின்ஸ் ஆகிய படங்களை தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகவுள்ள திரைப்படம் ‘அயலான்’. இந்த படத்தை ‘நேற்று, இன்று, நாளை’ படத்தை இயக்கிய ரவிக்குமார் இயக்கி வருகிறார். சயின்ஸ் பிக்சன் படமாக வெளியாகவுள்ள இப்படத்தை 24 பிரேம் நிறுவனம் தயாரித்து வருகிறது.  இப்படத்தில் சிவகார்த்திகேனுக்கு ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங் நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் கருணாகரன், இஷா கோபிகர், யோகிபாபு உள்ளிட்ட முக்கிய பிரபலங்கள் நடித்துள்ளனர்.  ஏ.ஆர் ரகுமான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். சயின்ஸ் பிக்சன் கதைக்களத்தில் உருவாகி வரும் இப்படத்தில் அனிமோஷன் பணிகள் அதிகமாக இருப்பதால் பணிகள் தாமதமாக நடைபெற்று வருகிறது. படத்தை தீபாவளிக்கு வெளியிடுவதாக படக்குழு தெரிரித்திருந்த நிலையில், தற்போது பொங்கல் பண்டிகைக்கு நாளை வெளியாகிறது

இந்நிலையில் கடன் பிரச்சனை காரணமாக அயலான் திரைப்படம் வௌியாவதில் புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது. படத்திற்காக பைனான்சியர் அசோசியேஷன், டிஎஸ்ஆர் நிறுவனம் பலரிடம் சுமார் 85 கோடி ரூபாய் கடன் வாங்கி இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் நாளை படம் வெளியாகுமா என்று ரசிகர்களிடையே குழப்பம் ஏற்பட்டுள்ளது.