×

துபாயில் ‘அயலான்’ டிரைலர் வெளியீடு!...

 

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் தயாராகியுள்ள ‘அயலான்’ படத்தின் டிரைலர் துபாயில் நடக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சிவகார்த்திகேயன் நடிப்பில் சயின்ஸ் பிக்ஷன் படமாக உருவாகியுள்ள படம் ‘அயலான்’. இந்த படத்தை நேற்று, இன்று, நாளை படத்தின் இயக்குநரான ஆர். ரவிக்குமார் இயக்கியுள்ளார். இப்படத்தை 24 பிரேம் நிறுவனம் தயாரித்துள்ளனர். இந்த படத்தில் கதாநாயகியாக ரகுல் பிரீத் சிங் நடித்துள்ளார். மேலும் யோகிபாபு, இஷா கோபிகர், பால சரவணன் என் பலர் நடித்துள்ளனர். ஏ. ஆர் ரஹ்மான் படத்திற்கு இசையத்துள்ளார். படம் வரும் பொங்கலுக்கு ரிலீஸ் ஆக உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆனால் அதற்கான பணிகளில் படக்குழு இன்னும் ஈடுபடாததால் ஒரு வேளை தேதி மாற்ற வாய்புள்ளதாக தகவல் வந்துள்ளது.

இந்த நிலையில் படத்தின் இசை வெளியிட்டு விழா வரும் 26ஆம் தேதி சென்னையில் நடக்க உள்ளதாக படக்குழு அறிவித்தது. அதனை தொடர்ந்து டிரைலர் வெளியீடு அடுத்த ஆண்டு ஜனவரி 7ஆம் தேதி துபாயில் கோலாகலமாக நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வந்துள்ளது.