×

‘அயலான்’ பட டீசர்- அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்ட படக்குழு.

 

‘அயலான்’ படத்தின் டீசர் எப்போது வெளியாகும் என அறிவித்து படக்குழு புது போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

சிவகார்த்திகேயன் நடிப்பில் சயின்ஸ் பிக்ஷன் படமாக உருவாகியுள்ள படம் ‘அயலான்’. இந்த படத்தை நேற்று, இன்று, நாளை படத்தின் இயக்குநரான ஆர். ரவிக்குமார் இயக்கியுள்ளார். இப்படத்தை 24 பிரேம் நிறுவனம் தயாரித்துள்ளனர். இந்த படத்தில் கதாநாயகியாக ரகுல் பிரீத் சிங் நடித்துள்ளார். மேலும் யோகிபாபு, இஷா கோபிகர், பால சரவணன் என் பலர் நடித்துள்ளனர். ஏ. ஆர் ரஹ்மான் படத்திர்கு இசையத்துள்ளார். கூடுதல் கிராபிக்ஸ் காட்சிகள் காரணமாக படத்தின் போஸ்ட் பிரொடக்ஷன் பணிகள் அதிக காலம் நடந்துவருகிறது.

இந்த நிலையில் படம் வரும் பொங்கல் ட்ரீட்டாக வெளியாகும் என படக்குழு அறிவித்து போஸ்டர் ஒன்றை சமீபத்தில் வெளியிட்டிருந்தனர். தற்போது படத்தின் டீசர் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.  அதாவது படத்தின் டீசர் அக்டோபர் மாதம்  6 ஆம் தேதி வெளியாகும் என அறிவித்து சிவகார்த்திகேயனும், ஏலியனும் ஜாலியாக பாப்கான் சப்பிட்டுக்கொண்டே படம் பார்ப்பது போல காட்சி அமைத்து போஸ்டர் வெளியிட்டுள்ளனர்.