×

அயலான் பட டீசர் அக்.,6-ம் தேதி ரிலீஸ்

 

சிவகார்த்திகேயன் நடிக்கும் அயலான் படத்தின் டீசர் வரும் அக்டோபர் 6-ம் தேதி வெளியாகிறது. 

ஆர்.ரவிகுமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள படம் 'அயலான்'. கடந்த 2018-ம் ஆண்டு தொடங்கிய இப்படத்தை 24 ஏஎம் ஸ்டுடியோஸ் மற்றும் கேஜேஆர் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்துள்ளது. ஏ.ஆர்.ரஹ்மான் படத்திற்கு இசை அமைத்துள்ளார். ரகுல் ப்ரீத் சிங், ஷரத் கேல்கர், இஷா கோப்பிகர், பானுப்ரியா, யோகி பாபு, கருணாகரன் ஆகியோர் படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். கிராபிக்ஸ் பணிகளில் ஏற்பட்ட தாமதத்தால் இப்படத்தின் வெளியீடு தொடர்ந்து தள்ளிவைக்கப்பட்டது. 4500-க்கும் மேற்பட்ட VFX காட்சிகளைக் கொண்ட திரைப்படம் என்பதால் இப்படத்தின் கிராபிக்ஸ் பணிகள் தொடர்ந்து இழுபறியாகவே இருந்து வந்தது. ஒருவழியாக இப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு வெளியாகும் என படக்குழு அண்மையில் அறிவித்திருந்தது. 

இந்நிலையில், அயலான் படத்தின் முன்னோட்டத்தை வரும் 6-ம் தேதி வெளியிடுவதாக படக்குழு அறிவித்துள்ளது. அதனுடன் ஒரு போஸ்டரையும் வெளியிட்டுள்ளது.