×

சுமார் 70 நாடுகளில் பிரம்மாண்டமாக வெளியாகும் அயலான் திரைப்படம்

 

ஆர்.ரவிகுமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள படம் 'அயலான்'. கடந்த 2018-ம் ஆண்டு தொடங்கிய இப்படத்தை 24 ஏஎம் ஸ்டுடியோஸ் மற்றும் கேஜேஆர் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்துள்ளது. ஏ.ஆர்.ரஹ்மான் படத்திற்கு இசை அமைத்துள்ளார். ரகுல் ப்ரீத் சிங், ஷரத் கேல்கர், இஷா கோப்பிகர், பானுப்ரியா, யோகி பாபு, கருணாகரன் ஆகியோர் படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். கிராபிக்ஸ் பணிகளில் ஏற்பட்ட தாமதத்தால் இப்படத்தின் வெளியீடு தொடர்ந்து தள்ளிவைக்கப்பட்டது. 4500-க்கும் மேற்பட்ட VFX காட்சிகளைக் கொண்ட திரைப்படம் என்பதால் இப்படத்தின் கிராபிக்ஸ் பணிகள் தொடர்ந்து இழுபறியாகவே இருந்து வந்தது. ஒருவழியாக இப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு வெளியாகும் என படக்குழு அண்மையில் அறிவித்திருந்தது. 

அயலான் படத்திலிருந்து முதல் பாடல் கடந்த ஆண்டே வெளியான நிலையில், தற்போது இரண்டாவது பாடலை இம்மாத இறுதியில் வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது. மேலும், அயலான் திரைப்படம் 65-க்கும் மேற்பட்ட நாடுகளில், அதிக எண்ணிக்கையிலான திரையரங்குகளில் வெளியாக உள்ளது.