×

அயலான் பட டிரைலர் வெளியானது

 

டான், பிரின்ஸ் ஆகிய படங்களை தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகவுள்ள திரைப்படம் ‘அயலான்’. இந்த படத்தை ‘நேற்று, இன்று, நாளை’ படத்தை இயக்கிய ரவிக்குமார் இயக்கி வருகிறார். சயின்ஸ் பிக்சன் படமாக வெளியாகவுள்ள இப்படத்தை 24 பிரேம் நிறுவனம் தயாரித்து வருகிறது.  இப்படத்தில் சிவகார்த்திகேனுக்கு ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங் நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் கருணாகரன், இஷா கோபிகர், யோகிபாபு உள்ளிட்ட முக்கிய பிரபலங்கள் நடித்துள்ளனர்.  ஏ.ஆர் ரகுமான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். சயின்ஸ் பிக்சன் கதைக்களத்தில் உருவாகி வரும் இப்படத்தில் அனிமோஷன் பணிகள் அதிகமாக இருப்பதால் பணிகள் தாமதமாக நடைபெற்று வருகிறது. படத்தை தீபாவளிக்கு வெளியிடுவதாக படக்குழு தெரிரித்திருந்த நிலையில், தற்போது பொங்கல் பண்டிகைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

<a href=https://youtube.com/embed/kNpwAxnjbNA?autoplay=1&mute=1><img src=https://img.youtube.com/vi/kNpwAxnjbNA/hqdefault.jpg alt=""><span><div class="youtube_play"></div></span></a>" style="border: 0px; overflow: hidden"" style="border: 0px; overflow: hidden;" width="640">

இந்நிலையில், அயலான் படத்தின் டிரைலர் தற்போது இணையத்தில் வெளியாகி உள்ளது. டிரைலர் வெளியீட்டு நிகழ்ச்சி துபாயில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது.