×

இதுதான் உங்கள் ஊடக தர்மமா?- குமுதத்தை விளாசிய ‘அயலான்’ பட தயாரிப்பு நிறுவனம்.

 

சிவகார்த்திகேயன் நடிப்பில் ரிலீசுக்கு தயாராகி வரும் திரைப்படம் அயலான். சயின்ஸ் பிக்ஷன் படமாக தயாராகியுள்ள  இந்த படம் குறித்து பிரபல பத்திரிக்கை நிறுவனமான குமுதம் தவறான செய்தி வெளியிட்டுள்ளதற்கு, படத்தின் தயாரிப்பு நிறுவனம் தரமான பதிலடி கொடுத்துள்ளனர்.

அதாவது குமுதம் வார இதழில் “ சிக்கலில் அயலான் மீள்வாரா சிவகார்த்திகேயன்?” என்ற தலைப்பில் அயலான் படத்துக்கு சிக்கல் என்பது போல பொய்யான  செய்தி வெளியாகியுள்ளது. இதற்கு விளக்கம் கேட்டு தயாரிப்பு நிறுவனம் தரப்பில்  வார இதழை தொடர்புகொண்டு கேட்ட போது ‘தாங்கள் நீண்டகாலமாக அயலான் திரைப்படத்தின் exclusive செய்திக்காக பின்தொடர்ந்ததாகவும் ஆனால் அவர்கள் தங்களுக்கு  முன்னுரிமை அளிக்காமல் 'ஆனந்த விகடன்' நிறுவனத்திற்கு exclusive செய்திகளை கொடுத்ததால் தான் இந்த வார இதழில் அப்படியான செய்தியை வேண்டுமென்றே வெளியிட்டதாகவும் கூறுயுள்ளார்கள்.