பொங்கலை கொண்டாட வரும் ‘அயலான்’.
Sep 23, 2023, 16:41 IST
சிவகார்த்திகேயன் நடிப்பில் தயாராகியுள்ள ‘அயலான்’ படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டாக படம் வரும் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகும் என படக்குழு அறிவித்துள்ளது.
நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகவுள்ள திரைப்படம் ‘அயலான்’. இந்த படத்தை ‘நேற்று, இன்று, நாளை’ படத்தை இயக்கிய ரவிக்குமார் இயக்கியுள்ளார். சயின்ஸ் பிக்சன் படமாக வெளியாகவுள்ள இப்படத்தை 24 பிரேம் நிறுவனம் தயாரித்துள்ளனர். இப்படத்தில் சிவகார்த்திகேனுக்கு ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங் நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் கருணாகரன், இஷா கோபிகர், யோகிபாபு உள்ளிட்ட முக்கிய பிரபலங்கள் நடித்துள்ளனர். ஏ.ஆர் ரகுமான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.