காதல் படலாக உருவாகியுள்ள ‘திருட்டு பயலே’.. சசிகுமாரின் அயோத்தி ஃப்ர்ஸ்ட் சிங்கிள் !

 
Ayothi

சசிகுமார் நடிப்பில் உருவாகியுள்ள ‘அயோத்தி’ படத்தின் முதல் பாடல் வெளியிடப்பட்டுள்ளது. 

பிரபல இயக்குனரும், நடிகருமான சசிகுமார் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘அயோத்தி’. இந்த படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக ப்ரீத்தி அஸ்ராணி கதாநாயகியாக நடித்துள்ளார். இவர்களுடன் போஸ் வெங்கட், ‘குக் வித் கோமாளி’ புகழ், யஷ்பால் சர்மா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

Ayothi

சமூகத்தில் நிலவும் மத ரீதியான பிரச்சனைகளை பேசும் படமாக உருவாகியுள்ள இப்படத்தை இயக்குனர் மந்திர மூர்த்தி இயக்கியுள்ளார். டிரைடென்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் சார்பில் ஆர்.ரவீந்திரன் இப்படத்தை தயாரித்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு மதுரை மற்றும் ராமேஸ்வரம் பகுதிகளில் படமாக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே இப்படத்தின் டிரெய்லர் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ள நிலையில் தற்போது இறுதிக்கட்ட தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் என்.ஆர்.ரகுநந்தன் இசையில் உருவாகியுள்ள இப்படத்தின் முதல் பாடல் வெளியிடப்பட்டுள்ளது. லா வரதன் எழுதியுள்ள இந்த பாடலை மதிசியம் பாலா பாடியுள்ளார். ‘திருட்டு பயலே’ என தொடங்கும் இந்த காதல் பாடல் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. 

<a href=https://youtube.com/embed/74XxeuTjUkQ?autoplay=1&mute=1&start=130><img src=https://img.youtube.com/vi/74XxeuTjUkQ/hqdefault.jpg alt=""><span><div class="youtube_play"></div></span></a>" style="border: 0px; overflow: hidden"" style="border: 0px; overflow: hidden;" width="640">