×

"தெலுங்கு சினிமாவிற்கு பாகுபலி.. தமிழ் சினிமாவிற்கு கங்குவா" -இயக்குநர் சுசீந்திரன் புகழாரம் 

 

சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள 'கங்குவா' திரைப்படம் நவ.14 அன்று திரையரங்குகளில் வெளியானது. 3டி தொழில்நுட்பத்தில் பான் இந்தியா முறையில் உலகம் முழுவதும் வெளியான இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இந்நிலையில் தெலுங்கு சினிமாவில் ராஜமவுலியின் பாகுபலி எவ்வளவு பிரம்மாண்டமான திரைப்படமோ அதேபோல் தமிழின் பிரமாண்ட திரைப்படமாக கங்குவா அமைந்துள்ளதாக தமிழ் இயக்குனர் சுசீந்திரன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள கடித்ததில், நேற்று மாலை என் குழந்தைகளுடன் "கங்குவா" திரைப்படத்தைப் பார்த்தேன், தமிழ் சினிமாவில் மிகவும் நேர்த்தியான பிரம்மாண்டமான திரைப்படம் இது, ரசிக்கும்படியான திரைக்கதை அமைத்துள்ளார் சிவா இயக்குனர் அவர்கள், அவருக்கு என்னுடைய வாழ்த்துகள், சூர்யா sir-ன் நடிப்பு, உழைப்பு பிரமிக்க வைக்கிறது. அனைத்து துறைகளிலும் உலகத் தரத்துக்குத் தமிழில் இந்த கங்குவா, தமிழக மக்களுக்கு ஒரு வேண்டுகோள்,காலம் தாழ்த்தி கொண்டாடி விடாதீர்கள், அனைவரும் குடும்பத்துடன் சென்று இந்த திரைப்படத்தைப் பாருங்கள் " கங்குவா" உங்களை மகிழ்விப்பாள். என்று தெரிவித்துள்ளார்.  


மேலும் படத்தை பாராட்டி வீடியோ ஒன்றையும் தனது சமூக வலைதள பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ளார். சுசீந்திரன் தமிழில் பாண்டிய நாடு, பாயும் புலி உள்ளிட்ட பல்வேறு படங்களை இயக்கியவர் ஆவார்.