×

‘பாபா’ வெறும் தோல்வி படம் அல்ல, மிகப்பெரிய டிசாஸ்டர் - பிரபல நடிகை வேதனை !

 

‘பாபா’ படத்தின் தோல்விக்கு பிறகு தென்னிந்திய மார்க்கெட்டை இழந்தேன் என நடிகை மனிஷா கொய்ராலா தெரிவித்துள்ளார். 

கடந்த 2002-ஆம் ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான திரைப்படம் ‘பாபா’. ரஜினிகாந்த் கதை, திரைக்கதை எழுதிய இந்த படத்தை சுரேஷ் கிருஷ்ணா இயக்கியிருந்தார். இந்த படத்தில் மனிஷா கொய்ராலா, நாசர், கவுண்டமணி, எம்.என்.நம்பியார், சுஜாதா, டெல்லி கணேஷ், கருணாஸ் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். 

நாத்திகராக இருக்கும் ரஜினிக்கு, கடைசியாக இறை பக்தி வந்ததா ? இல்லையா ? என்பதுதான் படம். இந்த ரசிகர்கள் எதிர்பார்த்தது மாதிரி படம் இல்லை. ரஜினிகாந்த் உச்சத்தில் இருந்த போது வெளியான இந்த படம் ரசிகர்களிடையே போதிய வரவேற்பை பெறவில்லை. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்த படம் படுதோல்வியை சந்தித்தது.

 

 இந்நிலையில் இந்த படத்தில் கதாநாயகியாக நடித்த மனிஷா கொய்ராலா பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில் ‘பாபா’ படத்தில் நடிப்பதற்கு முன் பல நல்ல படங்களில் நடித்துக் கொண்டிருந்தேன். இந்த படத்தின் படுதோல்விக்கு பிறகு மொத்த வாய்ப்பையும் இழந்தேன். பாபா படத்தால் நான் அழிந்தேன். இந்த படம் வெறும் தோல்வி படம் மட்டுமல்ல, அது என் வாழ்க்கை ஏற்பட்ட மிகப்பெரிய டிசாஸ்டர். ‘பாபா’ படத்தால் ஒட்டுமொத்த தென்னிந்திய வாய்ப்பையும் இழந்துவிட்டேன் என்று கூறினார்.