×

96 பட ஜோடியுடன் பாக்யராஜ் நடிக்கும் புதிய படம் .

 

ஒரிஜின் ஸ்டுடியோஸ் சார்பில் கண்ணதாசன் புதிய படம் ஒன்றை தயாரிக்கிறார். இப்படத்துக்கு இன்னும் பெயரிடப்படவில்லை. புரொடக்ஷன் நம்பர் 1 என தற்காலிகமாக பெயர் சூட்டப்பட்டுள்ளது. ராஜ்குமார் ரங்கசாமி இப்படத்தை இயக்குகிறார். எல்.ராமச்சந்திரன் ஒளிப்பதிவு செய்கிறார். ஜோன்ஸ் ரூபர்ட் இசை அமைக்கிறார்.
96 படத்தில் நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த ஆதித்யா பாஸ்கர், கௌரி கிஷன் ஜோடியாக நடிக்கிறார்கள். இயக்குனர் கே பாக்யராஜ் முக்கிய வேடமொன்றில் நடிக்கிறார். இவர்களுடன் கிங்ஸ்லி,
டி எஸ் ஆர், ஒளிப்பதிவாளர் ராஜூமேனன் மகள் சரஸ்வதி மேனன், இயக்குனர் சாய் ரமணி ஆகியோர் நடிக்கிறார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை, பாண்டிச்சேரி, பொள்ளாச்சி, நாமக்கல் மற்றும் கோவா போன்ற இடங்களில் நடந்திருக்கிறது. இதன் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை எட்டி இருக்கிறது. இந்த ஆண்டு படம் திரைக்கு வர உள்ளது.
பட தயாரிப்பாளர் கண்ணதாசன் கூறியதாவது: இயக்குனராக வேண்டும் என்ற எண்ணத்தில் நான் உதவி இயக்குனராக பணியாற்றி வந்தேன். இந்நிலையில் எனது நண்பர் ராஜ்குமார் ரங்கசாமி இந்த கதையை என்னிடம் கூறினார். இந்த காலகட்டத்திற்கு ஏற்ப சரியான கதையாகவும், சொல்ல வேண்டிய கதையாகவும் இருந்ததால் அதனை தயாரிக்க முடிவு செய்தேன். இப்படத்தை அடுத்து தொடர்ந்து படங்கள் தயாரிக்க எங்களது நிறுவனம் திட்டமிட்டுள்ளது இவ்வாறு தயாரிப்பாளர் கண்ணதாசன் கூறினார்..