இயக்குனர் பாலாவுக்கு பிடித்த நடிகை யார் தெரியுமா ?-அவரே கூறிய தகவல்
ஏ.எல்.விஜய் எழுதி இயக்கியுள்ள ‘காதல் ரீசெட் ரிப்பீட்’ என்ற படத்தில் மதும்கேஷ், ஜியா சங்கர், அர்ஜூன் அசோகன், எம்.எஸ்.பாஸ்கர், ஜெயப்பிரகாஷ், விஜி சந்திரசேகர் நடித்துள்ளனர். அரவிந்த் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்ய, ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைத்துள்ளார். ஆண்டனி எடிட்டிங் செய்ய, சரவணன் வசந்த் அரங்கம் அமைத்துள்ளார். மனோகர் வர்மா சண்டைப் பயிற்சி அளித்துள்ளார். தமிழகத்தில் ரோமியோ பிக்சர்ஸ் சார்பில் ராகுல் வெளியிடுகிறார். சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட இயக்குனர் பாலா கூறுகையில், ‘இயக்குனர் ஏ.எல்.விஜய்தான் எனக்கு குரு.
அவர் எனக்கு ஜூனியராக இருக்கலாம். எந்த டெக்னீஷியனாக இருந்தாலும், எப்படி கடுமையாக உழைக்க வேண்டும் என்று எனக்கு கற்றுக்கொடுத்த குரு ஏ.எல்.விஜய்தான். அவர் எனக்கு தாயுமானவன். ஒரு தாயும், தகப்பனுமாக இருந்து என்னை கவனித்து வருகிறார். திரையுலகில் 25 வருடங்களை கடந்துள்ள இசை அமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜுக்கு வாழ்த்துகள். ‘மதயானைக்கூட்டம்’ படத்தில் நடித்த விஜி சந்திரசேகரின் மிகப்பெரிய ரசிகன் நான். படத்தில் ஒரு காட்சியில், தனது மனதிற்குள் நினைத்ததை கண்களிலேயே காட்டி நடித்து அசத்தியிருப்பார். அதுபோன்ற திறமை நூற்றில் ஒருவருக்குத்தான் வரும். எனக்குப் பிடித்த நடிகை ராதிகா. அதற்கு பிறகு விஜி சந்திரசேகர்’ என்றார்.