அரண்மனை போல் 100 கோடியில் சொகுசு மாளிகை கட்டும் பிரபல நடிகர் -யார் தெரியுமா ?
Oct 23, 2026, 07:00 IST
ஐதராபாத் ஜுபிளி ஹில்ஸ் பகுதியில் புதிய பங்களாவை கட்டும் பாலகிருஷ்ணா, விரைவில் அங்கு தனது குடும்பத்தினருடன் குடியேறுகிறார்.
மாளிகை போன்று பிரமாண்டமாக கட்டப்படும் இது, 10 ஆயிரம் சதுர அடியில் 2 மாடிகள் கொண்ட அதிநவீன வசதிகள் கொண்டதாக அமைக்கப்படுகிறது. அதில் ஹோம் தியேட்டர், ஜிம், நீச்சல் குளம், கோயில், தோட்டம் போன்றவை அமைக்கப்படுகிறது. பங்களாவை அலங்கரிக்கும் பொறுப்பை பாலகிருஷ்ணா மனைவி வசுந்தரா ஏற்றுள்ளார். தற்போது அந்த பங்களாவின் மதிப்பு 100 கோடி ரூபாய் என்று கணக்கிடப்பட்டுள்ளது. கடந்த 2021ல் ரூ.15 கோடிக்கு வாங்கிய நிலத்தில் இந்த பங்களா கட்டப்பட்டு வருகிறது.