×

ஆழ்கடல் உலகத்திற்கு அழைத்து செல்லும் Bambooziya பாடல் ப்ரோமோ  

 

பிரபல மலையாள நடிகர் மோகன்லால் தற்பொழுது பரோஸ் என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். இது இவர் இயக்கும் முதல் படமாகும். இந்த படத்தில் குரு சோமசுந்தரம், மீரா ஜாஸ்மின், ஸ்பானிஷ் நடிகை பாஸ் வேகா, ரபேல் அமர்கோ உட்பட பலர் நடித்துள்ளனர். இந்த படத்தை அந்தோணி பெரும்பாவூர் தயாரித்துள்ளார். குழந்தைகளை கவரும் விதமாக உருவாகியுள்ள இந்த படத்துக்கு சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்துள்ளார். லிடியன் நாதஸ்வரம் இசை அமைத்துள்ளார். 3டி-யில் உருவாகும் இந்த படம், பான் இந்தியா முறையில் வரும் டிசம்பர் 25 ஆம் தேதி வெளியாக இருக்கிறது.

<a href=https://youtube.com/embed/2GmWFUIQlUw?autoplay=1&mute=1><img src=https://img.youtube.com/vi/2GmWFUIQlUw/hqdefault.jpg alt=""><span><div class="youtube_play"></div></span></a>" style="border: 0px; overflow: hidden"" style="border: 0px; overflow: hidden;" width="640">

வாஸ்கோட காமாவின் மதிப்புமிக்க பொக்கிஷங்களைப் பாதுகாத்த, பாதுகாவலரான பரோஸ் என்பவரின் வாழ்க்கை கதைதான் இந்த படம் என்கிறார்கள். படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.இந்நிலையில் படத்தின் பாடலான பம்பூசியா பாடலின் வீடியோ ப்ரோமோவை படக்குழு தற்பொழுது வெளியிட்டுள்ளது. இப்பாடல் முழுக்க முழுக்க தண்ணீருக்குள் அமைந்துள்ளது கூடுதல் சிறப்பாகும்.