☰
×

பரத் நடிக்கும் புதிய படம் -உடன் நடிப்பது யார் யார் தெரியுமா ?

 

ட்வின் டவர் புரொடக்‌ஷன்ஸ், டி குரோனிக்கள் புரொடக்‌ஷன்ஸ் இணைந்து தயாரிக்க, அறிமுக இயக்குனர் எம்.குரு இயக்கத்தில் புதிய படம் உருவாகிறது. தமிழ் சினிமாவில் தனது மாறுபட்ட கதாபாத்திரங்களால் ரசிகர்களை கவர்ந்த பரத் மற்றும் மலையாள திரையுலகில் இயல்பான நடிப்பாலும் நகைச்சுவையாலும் தனி முத்திரை பதித்த நடிகரும் இயக்குனருமான ராஜேஷ் மாதவன் இருவரும் இணையும் இப்படத்தின் படப்பிடிப்பு  பூஜையுடன் தொடங்கியது.

நகைச்சுவை, காதல், குடும்ப உணர்வுகள், சென்டிமென்ட் என அனைத்து அம்சங்களும் நிறைந்த கமர்ஷியல் ஃபேமிலி என்டர்டெய்னராக இப்படம் உருவாகிறது. இப்படத்தின் பூஜையில் இயக்குனர் விருமாண்டி முதல் கிளாப் அடித்து படப்பிடிப்பை தொடங்கி வைத்தார். சமீபத்தில் வெளியான ‘ஜெயிலர் 2’ படத்தின் ‘அல்லபொலேலோ’ பாடலில் தோன்றி தமிழ் ரசிகர்களிடமும் வரவேற்பை பெற்ற ராஜேஷ் மாதவன் இப்படத்தில் முக்கிய வேடத்தில் இணைவது எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

ஷ்வஸ்தா ராஜ், மீனாட்சி தினேஷ் மற்றும் ரக்‌ஷனா இந்துசூடன் ஆகியோர் ஹீரோயின்களாக நடிக்கின்றனர். மேலும், முனீஷ்காந்த், சுஜிதா, கட்டெறும்பு ஸ்டாலின் உள்பட பலர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். எஸ்.ஆர்.சதீஷ் குமார் ஒளிப்பதிவு செய்கிறார்.