சிவகார்த்திகேயனின் ‘பராசக்தி’ படத்தில் இணைந்த பசில் ஜோசப்..!
Mar 16, 2025, 12:07 IST
சிவகார்த்திகேயனின் ‘பராசக்தி’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் பசில் ஜோசப் நடிப்பது உறுதியாகி உள்ளது.
சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா, ஸ்ரீலீலா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘பராசக்தி’. இந்தப் படத்தை ஆகாஷ் பாஸ்கரன் பெரும் பொருட்செலவில் தயாரித்து வருகிறார். இப்படம் ஜி.வி.பிரகாஷ் இசையில் உருவாகும் 100-வது படமாகும். அதுமட்டுமன்றி சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகும் 25-வது படம் .
சுதா கொங்காரா இயக்கி வரும் ‘பராசக்தி’ படத்தின் படப்பிடிப்பு இலங்கையில் நடைபெற்று வருகிறது. இதில் அனைத்து நடிகர்களும் பங்குபெறும் சில முக்கிய காட்சிகளை படக்குழு படமாக்கி வருகிறது. இதில் முன்னணி மலையாள நடிகரும், இயக்குநருமான பேசில் ஜோசப் இணைந்துள்ளார். அவரும் ரவி மோகனும் படப்பிடிப்பு தளத்தில் இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி இருக்கிறது.