×

படிக்கவில்லையே என்ற வருத்தம் இன்னும் இருக்கிறது- பாக்யராஜ்

 


வேலூர் மாவட்டம், அரியூரில் உள்ள நாராயணி கல்லூரிகள் குழுமத்தில் பயின்ற செவிலியர் மாணவ,மாணவிகள் மற்றும் ஆய்வக பணியாளர்கள் உள்ளிட்ட பலதுறைகளில் பயின்று படிப்பை முடித்த மாணவ,மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கும் விழா நாராயணி மருத்துவமனை இயக்குநர் பாலாஜி தலைமையில் நடைபெற்றது. இதில் நாராயணி கல்வி குழுமத்தில் பயின்று பட்டங்களை முடித்த மாணவ,மாணவிகளுக்கு பட்டங்களை நடிகரும் திரைப்பட இயக்குநருமான கே.பாக்யராஜ் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு பட்டங்களை வழங்கினார்.

 


பின்னர் விழாவில் நடிகரும் திரைப்பட இயக்குநருமான கே,பாக்யராஜ் பேசுகையில்,  மாணவ மாணவியர் நன்றாக படிக்க வேண்டும் தற்போது படிக்கும் மாணவர்கள் நீங்கள் நல்லபடியாக படிப்பை முடித்துள்ளீர்கள் ஆனால் நான் இன்னும் படிக்கவில்லையே என்ற வருத்தம் எனக்கு இன்றைக்கும் இருந்து கொண்டு தான் இருக்கிறது . இருந்தாலும் சினிமாவில் எதோ ஒன்றை செய்தோம் என்ற ஆத்ம திருப்தியை அடைந்துள்ளேன். செவிலியர்கள் மருத்துவர்கள் பணி என்பது மிகவும் பொறுமை தன்மையும் சேவை மனப்பான்மையுடனும் மக்களுக்கு சேவை செய்யும் பணி அதை பட்டம் பெற்றவர்கள் சிறப்பாக பணிபுரிய வாழ்த்துக்களை தெரிவித்தார்.