×

பரத் - வாணிபோஜன் இணைந்து நடித்துள்ள ‘லவ்’... க்ரைம் த்ரில்லரில் உருவாகியுள்ள டிரெய்லர் !

 

பரத் மற்றும் வாணிபோஜன் இணைந்து நடித்துள்ள ‘லவ்’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. 

பிரபல நடிகராக இருக்கும் பரத்தின் 50வது படமாக உருவாகியுள்ளது'லவ்' திரைப்படம். இந்த படத்தில் பரத்திற்கு ஜோடியாக வாணிபோஜன் நடித்துள்ளார். மலையாளத்தில் புலி முருகன், லூசிபர், குரூப், சல்யூட் ஆகிய படங்களுக்கு டயலாக் ரைட்டராக பணியாற்றிய ஆர்.பி பாலா இந்த படத்தை இயக்கியுள்ளார். 

மேலும் இந்த படத்தில் ராதாரவி, விவேக் பிரசன்னா, டேனியல் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு ரொன்னி ரெபல் இசையமைத்துள்ளார். ஆர்பி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தின் இறுதிக்கட்ட தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. 

இந்நிலையில் இப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இப்படம் வரும் ஜூலை 28-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி இப்படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது. க்ரைம் த்ரில்லரில் உருவாகியுள்ள இந்த படத்தின் டிரெய்லர் வரவேற்பை பெற்றுள்ளது. 

  <a href=https://youtube.com/embed/lhUpSZ1FhOs?autoplay=1&mute=1&start=142><img src=https://img.youtube.com/vi/lhUpSZ1FhOs/hqdefault.jpg alt=""><span><div class="youtube_play"></div></span></a>" style="border: 0px; overflow: hidden"" style="border: 0px; overflow: hidden;" width="640">