×

நடிகர் பரத் நடித்துள்ள 'காளிதாஸ் 2' பட பர்ஸ்ட் லுக் நாளை ரிலீஸ்...
 

 

நடிகர் பரத் நடித்துள்ள காளிதாஸ் 2 படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

ஷங்கர் இயக்கத்தில் பாய்ஸ் படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் நடிகர் பரத். பின்னர் காதல், வெயில், பழனி, கண்டேன் காதலை போன்ற படங்களில் நடித்து கவனம் பெற்றார். கடந்த 2019ஆம் ஆண்டு  ஸ்ரீ செந்தில் இயக்கிய காளிதாஸ் என்ற படத்தில் பரத் நடித்திருந்தார்.  இந்தப்படம் நல்ல வரவேற்பினை பெற்றதையடுத்து, தற்போது இதன் இரண்டாம் பாகம் உருவாகிறது.