நாகினியாக நடிக்கும் பாரதி கண்ணம்மா வில்லி..! எந்த டிவியில் தெரியுமா ?
Jul 8, 2024, 09:00 IST
விஜய் டிவியில் ஒளிபரப்பான பாரதி கண்ணம்மா என்ற சீரியலில் வில்லியாக நடித்திருந்தார் நடிகை ஃபரினா.இந்த சீரியல் இவருக்கு பெயரையும் புகழையும் பெற்றுக் கொடுத்தது.
ஆரம்பத்தில் தொகுப்பாளினியாக பிரபலமான இவருக்கு, பாரதி கண்ணம்மா சீரியல் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை கொடுத்தது. இந்த சீரியலுக்கு பின்னர் இவர் எந்த ஒரு சீரியல்களிலும் வில்லியாக நடிக்கவில்லை.
தற்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக இருந்து கலக்கி வருகின்றார். மேலும் ஹாட்ஸ்டார் தளத்தில் ஒளிபரப்பாகும் உப்பு புளி காரம் வெப் தொடரிலும் முக்கிய கேரக்டரில் நடித்து வருகின்றார்.
இந்த நிலையில், ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நினைத்தாலே இனிக்கும் என்ற சீரியலில் வில்லியாக தற்போது களமிறங்கியுள்ளார் நடிகை ஃபரினா.
இதற்கான ப்ரோமோ வெளியாகி ஃபரினாவின் ரசிகர்களுக்கு சந்தோஷத்தை பெற்றுக் கொடுத்துள்ளது. ஆனாலும் இந்த சீரியலில் ஃபரினா நாகினி போல காட்டப்படுகிறார். இது ரசிகர்களுக்கு பெரிய ட்விஸ்ட்டாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.