×

பாரதிராஜா நடிப்பில் உருவாகும் ‘மார்கழி திங்கள்’... பூஜையுடன் தொடங்கியது ஷூட்டிங் !

 

மனோஜ் பாரதிராஜா இயக்கத்தில் உருவாகும் ‘மார்க்கழி திங்கள்’ படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் இன்று தொடங்கியுள்ளது. 

முன்னணி இயக்குனராக பாரதிராஜா முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் திரைப்படம் ‘மார்க்கழி திங்கள்’. இந்த படத்தை பாரதிராஜாவின் மகன் மனோஜ் இயக்கி வருகிறார். இசைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படமாக உருவாகும் இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார். 

இந்த படத்தில் ஷியாம் செல்வன் மற்றும் ரக்ஷனா இந்துசூடன் இணைந்து முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.  இதுதவிர முழுக்க முழுக்க புதுமுகங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இந்த படத்தை பிரபல இயக்குனர் சுசீந்திரன், தனது வெண்ணிலா பிரொக்ஷன்ஸ் நிறுவனம் சார்பாக தயாரிக்கிறார்.

கிராமத்து கதைக்களத்தில் அழகான காதல் கதையில் இப்படம் உருவாகிறது. இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் இன்று தொடங்கியது. இந்த படத்தின் படப்பிடிப்பு தேனி மற்றும் மதுரை ஆகிய பகுதிகளில் உள்ள கிராமங்களில் நடைபெற உள்ளது.