இனி பிக் பாஸ் தொகுப்பாளர் இவர் தானா..? யார் அந்த பிரபலம்...
Aug 7, 2024, 12:20 IST
பிக் பாஸ் தமிழில் இதுவரை 7 சீசன்கள் நிறைவடைந்து இருக்கிறது. அனைத்தையும் கமலஹாசன் தான் தொகுத்து வழங்கி வந்தார். ஆனால் தற்போது அவர் ஷோவில் இருந்து விலகுவதாக திடீரென அறிவித்து இருக்கிறார். சினிமா படப்பிடிப்பு காரணங்களால் பிக் பாஸில் இருந்து விலகுவதாக அவர் குறிப்பிட்டு இருந்தார். இதனால் ரசிகர்கள் உச்சகட்ட அதிர்ச்சியில் இருக்கிறார்கள்.
இந்நிலையில், கமல்ஹாசனுக்கு பதிலாக பிக் பாஸ் தொகுத்து வழங்கப்போவது யார் என்கிற எதிர்ப்பார்ப்பு ரசிகர்களிடம் எழுந்து இருக்கிறது. தற்போது விஜய் டிவி தரப்பில் இருந்து விஜய் சேதுபதி மற்றும் நயன்தாரா உடன் பேச்சுவார்த்தையில் இருக்கிறார்கள் என ஒரு தகவல் பரவி வருகிறது. அது வெறும் வதந்தி தானா அல்லது அவர்கள் பிக் பாஸ் தொகுத்து வழங்க வர வாய்ப்பு இருக்கிறதா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.