×

ஹீரோவான பிக்பாஸ் மணிகண்டன்.... படத்தை தொடங்கி வைத்த பிரபல நடிகை !

 

பிக் பாஸ் மணிகண்டன் நடிக்கும் புதிய படத்தை பிரபல நடிகையான ஐஸ்வர்யா ராஜேஷ் தொடங்கி வைத்துள்ளார். 

பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் மணிகண்டன். பிரபல நடிகையான ஐஸ்வர்யா ராஜேஷினீ சகோதரரான அவர் புதிய வெப் தொடர் மூலம் கதாநாயகன் அறிமுகமாக உள்ளார். 'மை டியர் டயானா' என்ற தலைப்பில் உருவாகும் இந்த படத்தை அறிமுக இயக்குனர்கள் பி.கே.விஜய் மற்றும் கிரிதர் ராமகணேஷ் இணைந்து இயக்கவுள்ளனர். 

இந்த தொடரில் மணிகண்டன், மகாலட்சுமி, ஜனா குமார், மகேஷ் சுப்ரமணியம்,. அக்சயா பிரேம்நாத், துரோஷினி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்த வெப் தொடரில் வாட்ஸ் பிரபு ஒளிப்பதிவாளராகவும், குஹா கணேஷ் இசையமைப்பாளராகவும் பணியாற்றவுள்ளனர். வோர்ஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகும் இந்த வெப் தொடர் ரொமான்டிக் த்ரில்லர் ஜானரில் உருவாக உள்ளது. 

 இந்நிலையில் இந்த தொடரின்  தொடக்க விழா இன்று பூஜையுடன் தொடங்கியது. இந்த வெப் தொடரின் முதல் ஷாட்டை நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தொடங்கி வைத்தார். விரைவில் இந்தத் தொடரின் படப்பிடிப்பு தொடங்க உள்ளது. இதற்கிடையே சீரியல் மற்றும் சினிமாவில் குணசித்திர வேடங்களில் நடித்து வந்த மணிகண்டன், இந்த வெப் தொடர் மூலம் ஹீரோவாகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.