×

மிஸ்ட்ரி த்ரில்லர் படத்தில் ‘சார்பட்டடா’ நடிகர்...  பர்த் மார்க் டீசர் வெளியீடு !

 

‘சார்பட்டா பரம்பரை’ பட நடிகர் ஷபீர் கல்லராக்கல் நடிப்பில் உருவாகியுள்ள ‘பர்த் மார்க்’ படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. 

பா ரஞ்சித் இயக்கத்தில் வெளியான ‘சார்பட்டா பரம்பரை’ படத்தில் ‘டான்ஸிங் ரோஸ்’ கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் நடிகர் ஷபீர் கல்லராக்கல். அவர் தற்போது ஹீரோவாக நடித்துள்ள திரைப்படம் ‘பர்த் மார்க்’. இந்த படத்தை விக்ரம் ஸ்ரீதரன் எழுதி இயக்கியுள்ளார்.

இந்த படத்தில் கதாநாயகியாக மிர்னா நடித்துள்ளார். இவர்களுடன் தீப்தி, இந்திரஜித், பொற்கொடி, பி.ஆர்.வரலட்சுமி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். விஷால் சந்திரசேகர் இசையமைக்கும் இப்படத்திற்கு உதய் தங்கவேல் ஒளிப்பதிவு செய்துள்ளார். 

இந்த படத்தின் படப்பிடிப்பு தமிழகம் மற்றும் கேரளா இடையே அமைந்துள்ள மறையூர் என்ற அழகிய மலை கிராமத்தில் நடைபெற்றுள்ளது. 90-களில் நடைபெறுவது போல் கதைக்களம் அமைக்கப்பட்டு படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது. இந்நிலையில் மிஸ்ட்ரி த்ரில்லர் கதைக்களத்தில் உருவாகியுள்ள இந்த படத்தின் டீசர் வெளியிடப்பட்டுள்ளது. இந்த டீசர் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. 
 

<a href=https://youtube.com/embed/n-xIGa1ij0E?autoplay=1&mute=1&start=83><img src=https://img.youtube.com/vi/n-xIGa1ij0E/hqdefault.jpg alt=""><span><div class="youtube_play"></div></span></a>" style="border: 0px; overflow: hidden"" style="border: 0px; overflow: hidden;" width="640">