10 நாட்களில் இத்தனை கோடியா?- பைசன் வசூல் வேட்டை
Oct 27, 2025, 20:35 IST
மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடித்த பைசன் படத்தின் பாக்ஸ் ஆபிஸ் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிகர் துருவ் விக்ரம் நடித்த பைசன் காளமாடன் திரைப்படம் தீபாவளியை முன்னிட்டு வெளியாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி வருகிறது. நடிகர் துருவ் விக்ரம் நடித்துள்ள கபடி வீரர் கதாபாத்திரம் நிஜத்தில் திருச்செந்தூர் அருகே உள்ள மணத்தி கிராமத்தை சேர்ந்த அர்ஜுனா விருது பெற்ற கணேசன் என்பவரின் வாழ்க்கை வரலாறு.
இந்நிலையில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம், ரஜிஷா விஜயன், அனுபமா உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான ‘பைசன்’ திரைப்படம் 10 நாட்களில் ரூ.55 கோடி வசூலைக் கடந்ததாக படத் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.