×

பிரதமர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்த ஓவியா… சைபர் கிரைமில் புகார் செய்த பாஜக!

பிரதமர் சென்னை வருகைக்கு எதிராக கருத்து தெரிவித்த ஓவியா மீது பாஜக சார்பில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பிரதமர் மோடி நேற்று சென்னை வந்தார். அவரது வருகைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் சமூக வலைத்தளங்களில் பலர் #GobackModi என்ற ஹாஷ்டாக்கை ட்ரெண்ட் செய்தனர். நடிகை ஓவியாவும் #GobackModi என்ற ஹாஷ்டாக் உடன் பதிவு ஒன்றை வெளியிட்டார். அந்தப் பதிவு இணையத்தில் வைரலானது. இதுகுறித்து பல செய்திகளும் வெளியானது. அதையடுத்து ஓவியாவின் பதிவுக்கு நடிகை காயத்ரி ரகுராம் கண்டனம்
 

பிரதமர் சென்னை வருகைக்கு எதிராக கருத்து தெரிவித்த ஓவியா மீது பாஜக சார்பில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

பிரதமர் மோடி நேற்று சென்னை வந்தார். அவரது வருகைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் சமூக வலைத்தளங்களில் பலர் #GobackModi என்ற ஹாஷ்டாக்கை ட்ரெண்ட் செய்தனர்.

நடிகை ஓவியாவும் #GobackModi என்ற ஹாஷ்டாக் உடன் பதிவு ஒன்றை வெளியிட்டார். அந்தப் பதிவு இணையத்தில் வைரலானது. இதுகுறித்து பல செய்திகளும் வெளியானது. அதையடுத்து ஓவியாவின் பதிவுக்கு நடிகை காயத்ரி ரகுராம் கண்டனம் தெரிவித்துள்ளார்.

தமிழக பாஜகவின் சட்டப் பிரிவின் உறுப்பினர் அலெக்சிஸ் சுதாகர் என்பவர் ஓவியா மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சைபர் கிரைம் பிரிவில் வழக்கு பதிவு செய்துள்ளார். இந்தப் பதிவின் மூலம் பிரதமர் மோடியின் வருகைக்கு முன்னதாக பொது வெளியில் பிரச்சினைகளை வேண்டுமென்றே தூண்டியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

மேலும், இலங்கை மற்றும் சீனா போன்ற நாடுகள் இந்தியாவின் நாட்டில் சட்டம் ஒழுங்கை சீர்குலைக்க பல பிரச்சினைகளை உருவாக்கி வருவதாகவும், பிரதமர் மோடியை குறிவைத்து வருவதாகவும் குற்றம் சாட்டினார். ஓவியா போன்ற நபர்கள் அதற்கு உறுதுணையாக இருப்பதால் அவரது பாஸ்போர்ட்டை சரிபார்க்கவும், வெளிநாடுகளுடனான அவரது தொடர்பு குறித்து விசாரிக்கவும் அவர் அளித்துள்ள மனுவில் வலியுறுத்தியுள்ளார்.