×

பிளாக்பஸ்டர் வெற்றி... 'வீர தீர சூரன்' படத்தை பாராட்டிய பிரபல இயக்குனர்...
 

 

விக்ரம் நடிப்பில் வெளியாகி உள்ள 'வீர தீர சூரன்' படத்தை பிரபல இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் 
பாராட்டி பதிவிட்டுள்ளார். 

விக்ரம். துஷாரா விஜயன், எஸ்.ஜே.சூர்யா, சூரஜ் உள்ளிட்டோர் நடித்து அருண்குமார் இயக்கத்தில் வெளியான திரைப்படம் வீர தீர சூரன். இந்த திரைப்படம் பல சிக்கல்களை தாண்டி நேற்று மாலை காட்சிகளிலிருந்து வெளியிடப்பட்டது. தமிழகத்தில் ஒரு சில திரையரங்கில் மட்டும் மாலை 4 மணிக்கும் மற்ற திரையரங்களில் மாலை 6 மணி முதல் காட்சிகளை திரையிட்டனர். படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்த நிலையில்,  'வீர தீர சூரன்' படத்தை  பார்த்த பிரபல இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் 
பாராட்டி பதிவிட்டுள்ளார்.