×

ரத்த கறை படிந்த கைகள் :  ஆர்.ஜே. பாலாஜி நடிக்கும் சொர்கவாசல் ரிலீஸ் அப்டேட் 

 
நடிப்பு, இயக்கம் என பிஸியாக இயங்கி வரும் ஆர்.ஜே. பாலாஜி சூர்யாவின் 45 வது படத்தை இயக்க உள்ளதாக அறிவிப்பு வெளியானது. இந்நிலையில் ஆர்.ஜே. பாலாஜி சொர்கவாசல் திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். படத்தின் ஃபர்ஸ்ட்லுக் சில வாரங்களுக்கு முன் வெளியானது. பா. ரஞ்சித்தின் உதவி இயக்குநர் சித்தார்த் விஸ்வநாத் இந்த படத்தை இயக்கி உள்ளார். படத்திற்கு சொர்கவாசல் என பெயரிடப்பட்டுள்ளது. ஸ்வீப் ரைட் ஸ்டூடியோஸ் தயாரித்துள்ள இந்தப் படத்தின் கதையை இயக்குநர் உடன் தமிழ்ப் பிரபா, அஸ்வின் ரவிச்சந்திரன் இணைந்து எழுதியுள்ளனர். படத்தின் டீசர் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இப்படம் ஜெயிலில் நடக்க கூடிய கதைக்களமாக அமைந்துள்ளது. ஆர்.ஜே பாலாஜி முற்றிலும் மாறுப்பட்ட தோற்றத்தில் காணப்படுகிறார். கருணாஸ், செல்வராகவன், பாலாஜி சக்திவேல் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். திரைப்படம் நவம்பர் மாதம் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. ரத்த கறை படிந்த கைகள் பிச்சை கேட்பது போல் போஸ்டர் ஒன்றை வெளியிட்டு படத்தின் முக்கிய அறிவிப்பை இன்று மாலை 5 மணிக்கு வெளியிடவுள்ளதாக படக்குழு அறிவித்தது. அதன்படி புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டு படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. அந்த வகையில் சொர்க்வாசல் படம் வரும் நவம்பர் 29ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.