ரஜினிகாந்தின் அடுத்த படத்தில் இணையும் பாலிவுட் நடிகர் .
ரஜினி படத்திற்கு இப்போதெல்லாம் வசூலில் 1000 கோடி டார்கெட் நிர்ணயம் செய்யப்படுகிறது .ஜெயிலர் படத்தில் பாலிவுட் நடிகர்கள் நடித்தது அந்த வசூலுக்குக்காகத்தான் .ஆனால் அப்படம் 1000 கோடி வசூலிக்கவில்லை .கூலி அதை நோக்கி ஓடிக்கொண்டிருக்கிறது ,அந்த படத்தை போலவே ரஜினியின் அடுத்த படத்திலும் பாலிவுட் நடிகர் நடிக்கிறார்
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘ஜெயிலர்’ திரைப்படம் கடந்த ஆண்டு பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரிய சாதனை படைத்தது, உலகளவில் சுமார் ரூ.650 கோடி வசூலித்தது. அந்த வெற்றியின் தொடர்ச்சியாக உருவாகும் ‘ஜெயிலர் 2’ மீது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு மிகப்பெரிதாக இருக்கிறது என்றே கூறலாம். ஜெயிலர் 2 படத்தின் படப்பிடிப்பு தற்போது வேகமாக நடைபெற்று வருகிறது.
மேலும், இந்த படத்தில் மோகன்லால், சிவராஜ்குமார், ஜாக்கி ஷெராஃப் ஆகியோரும் சிறப்பு தோற்றத்தில் பங்கேற்றுள்ளனர். ஜெயிலர் படத்தின் முந்தைய பாகத்தில் இவர்கள் நடித்திருந்தனர் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயமே. முந்தைய பாகத்தை விட, 2ம் பாகம் மிகவும் பிரமாண்டமாக உருவாக்கி வருகிறது.
இதற்கிடையில், பாலிவுட்டின் புகழ்பெற்ற நடிகர் மிதுன் சக்கரவர்த்தி இந்த படத்தில் இணைந்துள்ளார் என்ற செய்தி திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தகவலின் படி, அவர் வரும் வாரமே படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என்றும், கேமியோ அல்லது முழுமையான கதாபாத்திரத்தில் தோன்றுவார் என்றும் கூறியுள்ளனர்.இந்த செய்தி சினிமா வட்டாரங்களில் ட்ரெண்டிங்காக மாறியுள்ளது.