'மெய்யழகன்' படத்தை பார்த்து அழுத பிரபல பாலிவுட் நடிகர்
Dec 8, 2024, 14:20 IST
கார்த்தியுடன் முதல் முறையாக அரவிந்த் சாமி நடித்த படம் மெய்யழகன். மும்பை, தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் கார்த்தி. இவரின் 27-வது படமாக உருவானது 'மெய்யழகன்'. இயக்குனர் பிரேம் குமார் இயக்கிய இப்படத்தில் கார்த்தியுடன் முதல் முறையாக அரவிந்த் சாமி நடித்திருந்தார். மேலும் ஸ்ரீதிவ்யா, ராஜ்கிரண், தேவதர்ஷினி, ஜெயபிரகாஷ் உள்ளிட்ட பலர் நடித்தனர். கார்த்தி மற்றும் அரவிந்த் சாமிக்கு இடையேயான உறவின் மகத்துவத்தைப் பேசும் படியாக உருவான இப்படம் கடந்த செப்டம்பர் மாதம் 27-ந் தேதி திரையரங்குகளில் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. பல்வேறு தரப்பினரும் இப்படத்திற்கு பாராட்டு தெரிவித்தனர்.