×

'மூளையை கழற்றிவிட்டு தான் நடிப்பேன்' - தென்னிந்திய சினிமாவை விமர்சித்த வில்லன் நடிகர் !

 

தென்னிந்திய சினிமாவை தரம் தாழ்ந்து வில்லன் நடிகர் ஒருவர் விமர்சித்துள்ளார்.

தென்னிந்தியாவில் பல முன்னணி ஹீரோக்களின் படங்களில் வில்லனாக நடித்து பிரபலமானார் நடிகர் ராகுல் தேவ். டெல்லியை சேர்ந்த அவர், கடந்த 2000-ஆம் ஆண்டு இந்தியில் வெளியான 'சாம்பியன்' படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். அதன்பிறகு அங்கு வாய்ப்பு இல்லாததால் தமிழில் விஜயகாந்த் நடிப்பில் வெளியான 'நரசிம்ஹா' வில்லனாக நடித்தார்‌. முதல் படத்திலேயே மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார்‌. 

பின்னர்  'அரசாங்கம்', 'ஜெய்ஹிந்த் 2', முனி, 'பத்து எண்ணறதுக்குள்ள' உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். தமிழில் கிடைத்த வரவேற்பை அடுத்து தெலுங்கில் 'சிம்ஹாத்ரி', 'மாஸ்', 'அத்தடு', 'வர்ஷம்' உள்ளிட்ட படங்களில் நடித்தார். தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் ஏராளமான திரைப்படங்களில் வில்லனாக நடித்து புகழ்பெற்றுள்ளார். 

இந்நிலையில் தென்னிந்தியா படங்கள் குறித்து அவர் வைத்துள்ள விமர்சனம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதில் தென்னிந்திய திரைப்படங்களில் லாஜிக் விதிமீறல்கள் அதிகம் இருக்கும். ஹீரோயிச மாயையை வைத்து ரசிகர்களை கவர்ந்து வருகின்றனர். நான் தென்னிந்திய படங்களில் நடிக்கும்போது வீட்டில் மூளையை கழற்றி வைத்துவிட்டு தான் படப்பிடிப்பிற்கு செல்வேன். என்னை போன்ற உடல் கட்டமைப்புடன் இருக்கும் ஒருவரை சாதாரண ஹீரோ அடித்துவிடுவார். அதை ரசிகர்கள் கொண்டாடும் போது அமைக்கவேண்டும் என்று கிண்டலாக கூறியுள்ளார்.