×

விளையாட்டு சம்பந்தமான படம் -நடிகர் போஸ் வெங்கட் இயக்குகிறார் 

 
நடிகர் போஸ் வெங்கட் பல படங்களில் நடித்துள்ளார் .இவர் படம் மட்டுமில்லை பல தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து புகழ் பெற்றவர் .மேலும் இவர் நடிப்புடன் படங்களை இயக்கியும் வருகிறார் .இவர் அடுத்து இயக்கும் படம் பற்றி நாம் காணலாம் 
கேஆர்ஜி மூவிஸ் கண்ணன் ரவி தயாரிப்பில், எட்செட்ரா எண்டர்டெயின்மெண்ட் வி.மதியழகன் இணை தயாரிப்பில், நடிகர் போஸ் வெங்கட் இயக்கும் படம் உருவாகிறது. ‘புரொடக்‌ஷன் நம்பர் 8’ என்று தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள இப்படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார். கடந்த 35 ஆண்டுகளாக துபாயில் முன்னணி தொழிலதிபராக இருக்கும் கண்ணன் ரவி, தனது கேஆர்ஜி மூவிசின் 7வது படத்தை தயாரிக்கிறார்.
‘கன்னி மாடம்’, ‘சார்’ ஆகிய வெற்றிப் படங்களை தொடர்ந்து போஸ் வெங்கட் இயக்கும் இப்படத்தில் பணியாற்றும் நடிகர்-நடிகைகள், டெக்னீஷியன்கள் தேர்வு நடந்து வருகிறது. படம் குறித்து போஸ் வெங்கட் கூறுகையில், ‘விளையாட்டை மையமாக கொண்ட இந்த படம் காதல், குடும்பம், சமூகம் என்று பல்வேறு முக்கிய அம்சங்களை குறித்து சுவாரஸ்யமாக பேசும். அதிக பொருட்செலவில் உருவாகும் இப்படம், விளையாட்டு சம்பந்தமான படங்களிலேயே ஒரு முக்கியமான மைல் கல்லாக இருக்கும். யுவன் சங்கர் ராஜாவுடன் முதல்முறையாக இணைந்து பணியாற்றுவது குறித்து அதிக மகிழ்ச்சி அடைகிறேன்’ என்றார்